/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
/
பள்ளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
ADDED : ஆக 13, 2024 01:31 AM
அன்னுார்;சொக்கம்பாளையம், ஜெ.ஜெ.,நகர் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலை ஒட்டி உள்ள பள்ளத்தில் நேற்று முன்தினம் பச்சிளம் ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது.
அந்த குழந்தையை நைட்டியில் சுற்றி யாரோ வீசி சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த விஜய் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் குழந்தைக்கு அன்னுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் ஆண் குழந்தையை கோவில் அருகே வீசி சென்றவர் யார் என்பது குறித்து அன்னுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். சொக்கம்பாளையம் பாதையில் உள்ள 'சிசி' டி.வி., கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.