/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை
/
புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை
புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை
புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை
ADDED : செப் 02, 2024 02:03 AM

வால்பாறை;வால்பாறை நகரில் உள்ள நுாலகம் போதிய பராமரிப்பின்றி, புதர் சூழ்ந்து காணப்படுவதால், வாசகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், நகரின் மத்தியில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகங்களும் செயல்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள நுாலகத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் வருகின்றனர். பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களும், நுாலகத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில், நுாலக கட்டடம் மேல்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது. நுாலகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
வாசகர்கள் கூறியதாவது: வால்பாறை நுாலகத்துக்கு தினமும், நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வருகின்றனர். எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லாததால், வால்பாறை நுாலகத்தை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாமல், பாழடைந்து காட்சியளிக்கிறது. நுாலகத்திற்குள் செல்லவே வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வாசகர்கள் நலன் கருதி, நுாலகத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.