/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் அருவி
/
நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் அருவி
ADDED : ஆக 19, 2024 01:29 AM

வால்பாறை;தொடர்மழையால் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் முதல், தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, கூழாங்கல்ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணை இரண்டு முறை நிரம்பியது.
அங்கு பரவலாக பெய்து வரும் மழையினால், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, பிர்லா நீர்வீழ்ச்சி, இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் குளிக்க அனுமதி இல்லாததால், சுற்றுலாபயணியர் கண்டு ரசித்து சென்றனர்.
மழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.18 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,087 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,093 கன அடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.
வால்பாறையில் நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 7, சோலையாறு - 25, பரம்பிக்குளம் - 15, ஆழியாறு - 4, மேல்நீராறு - 16, கீழ்நிராறு - 8, துணக்கடவு - 12, பெருவாரிப்பள்ளம் - 14, மேல்ஆழியாறு - 11, நவமலை- 2 என்ற அளவில் மழை பெய்துள்ளது.

