ADDED : ஜூலை 07, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:
பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவில் மைதானத்தில் நூற்றாண்டு பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் உள்பாகம் முற்றிலும் பட்டுப்போய் இருந்ததால், நேற்று காலை இரண்டாக பிளந்து விழுந்தது.
மரத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஒரு பெரும் கிளை விழுந்ததால், லாரி சேதமடைந்தது. அருகில் இருந்த ஒரு மின்கம்பமும் சேதமானது. தேவராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
