/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் காத்திருக்கும் ஆரோக்கிய வழி நேரம் செலவிட்டால் போதும்; பலனோ ஏராளம்
/
வீட்டில் காத்திருக்கும் ஆரோக்கிய வழி நேரம் செலவிட்டால் போதும்; பலனோ ஏராளம்
வீட்டில் காத்திருக்கும் ஆரோக்கிய வழி நேரம் செலவிட்டால் போதும்; பலனோ ஏராளம்
வீட்டில் காத்திருக்கும் ஆரோக்கிய வழி நேரம் செலவிட்டால் போதும்; பலனோ ஏராளம்
ADDED : ஆக 10, 2024 12:54 AM

வீடு கட்ட வேண்டும் என்ற இலக்கு மிகப்பெரியது தான். ஆனால், அதைச் சுற்றி இருக்கக் கூடிய இடங்களில், நம் மனதுக்கு ஏற்றவாறு, ஆரோக்கியத்துக்கு வித்திடும் வகையில், செடிகளை வளர்ப்பதிலும் காண்பிப்பது, அதை விட மிகப்பெரிது.
எவ்வளவு செலவு செய்து வீடு கட்டினாலும், மரமும், தண்ணீரும் இல்லாமல், ஒரு வீடு முழுமையடையாது என்று சொல்வார்கள். அது, எவ்வளவு நிஜம் என்பதை, இதுபோன்ற கட்டமைப்பு உள்ளவர்களுக்கு தெரியும். வீட்டில், மூலிகைகள், கீரைகள் மற்றும் காய்கறி என அதிக செடிகளை வளர்க்கலாம். நாம் வளர்க்கும் செடி, நமது உடல் நலனுக்கு பயன்தருகிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
சித்தரத்தை, துளசி, ஆடாதொடை, திருநீற்றுப் பச்சிலை, பிரண்டை போன்ற பல வகையான மூலிகைகளை நடவு செய்யலாம். துளசி சளியைப் போக்க வல்லது. பிரண்டை எலும்பை பலப்படுத்துவதில் மிகச்சிறந்தது. திருநீற்றுப் பச்சிலை, முகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தீர்வு தரும்.
கத்திரி, வெண்டை, தக்காளி, முருங்கை உட்படவற்றை நடவு செய்யலாம். கடைகளில் வாங்கும் செலவும், அவ்வப்போது குறையும். இயற்கையில் விளைந்த காய்கறியை உட்கொள்ளும் போது, அது அலாதியான சுவையாக இருக்கும்.
இன்று பரவலாக, மாடித் தோட்டம் அமைப்பது பெருகி வருகிறது. இதற்கான ஆலோசனையும் ஏராளமாக கிடைக்கிறது. இருக்கும் இடத்தை பயன்படுத்தினால், நம் ஆரோக்கியம் நம் கையில்.

