/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே தின பேரணியில் திரளானோர் பங்கேற்பு
/
மே தின பேரணியில் திரளானோர் பங்கேற்பு
ADDED : மே 02, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கங்கள் சார்பில், 138வது மே தின பேரணி நேற்று நடந்தது.
காந்திபுரம், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் எதிரே துவங்கிய பேரணியில், சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் சுகுமாறன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி., ஜேம்ஸ், சி.ஐ.டி.யு., பத்மநாபன் என ஏராளமானோர் சென்ற பேரணி, சிவானந்தா காலனியில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கோஷங்கள் எழுப்பியவாறும், பதாகைகள் ஏந்தியவாறும் சென்றனர்.

