/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரையை சேர்ந்தவர் கைது
/
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரையை சேர்ந்தவர் கைது
ADDED : மே 02, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், விற்பனைக்காக வைத்திருந்த, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா மற்றும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த அழகர்சாமி,54, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா மற்றும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.