/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக கட்டிய பாலம்; 4 மாதத்தில் 'டமால்'
/
புதிதாக கட்டிய பாலம்; 4 மாதத்தில் 'டமால்'
ADDED : ஏப் 10, 2024 12:32 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில், காரப்பட்டி கால்வாயில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்பட்டது.
விவசாயிகள் நீண்ட நாட்கள் கோரிக்கைக்கு பின், காரப்பட்டி கால்வாயில், தென்கரை பாலம் அருகே, 1.56 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
ஓடையின் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் காரப்பட்டி கால்வாய், 4.120 கி.மீ. உள்ள நீர் வழி பாலத்தில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ராஜலட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் இப்பணியை மேற்கொண்டது.
பணி முடிந்து நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காரப்பட்டி கால்வாய் பாலப்பணிகள் தரமாகத்தான் மேற்கொள்ளப்பட்டன. தண்ணீர் நிறுத்தும் போது, கால்வாயை சேதப்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் திறக்கும் போது கசிவு ஏற்பட்டு, சுவர் இடிந்திருக்கலாம்.
அப்பகுதியில், ஓடையில் தண்ணீர் திருடுவோர், இது போன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. வறட்சி காரணமாக, இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.

