/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
ADDED : ஆக 10, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, 160 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை, பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது தெற்குப்பாளையம். இங்கு வசிப்பவர் அய்யனார், 57. இவர் இங்குள்ள கிணறு அருகே நடந்து சென்ற போது,160 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறங்கி, அய்யனாரை கயிறு கட்டி மேலே பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அய்யனார் சேர்க்கப்பட்டார்.