தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நீர் மேலாண்மையை உணர்த்தும் பி.ஏ.பி., திட்டம்! இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள அறிவுரை

நீர் மேலாண்மையை உணர்த்தும் பி.ஏ.பி., திட்டம்! இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள அறிவுரை

நீர் மேலாண்மையை உணர்த்தும் பி.ஏ.பி., திட்டம்! இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள அறிவுரை


UPDATED : அக் 07, 2026 07:21 PM

ADDED : அக் 07, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:21 PM ADDED : அக் 07, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: ‘‘நீர் மேலாண்மை முக்கியத்துவம், நீர் வளங்களை முறையாக பயன்படுத்துவதன் அவசியத்தை அறிந்து கொள்ளும் வகையில் பி.ஏ.பி., பாசன திட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது,’’ என, அமைச்சர் பேசினார்.

பொள்ளாச்சி நீர்வளத்துறை பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், சி.சுப்ரமணியம் வளாகத்தில் பி.ஏ.பி., பாசன தின நிகழ்ச்சி நடந்தது. அதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., மகாலிங்கம் ஆகியோர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை கலெக்டர் பவன்குமார், எம்.எல்.ஏ., நித்தியானந்தன், சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு பாசன திட்டக்குழு தலைவர் செந்தில்குமார், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:

இன்றைய இளம் தலைமுறையினர் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், நீர்வளங்களை பாதுகாத்து முறையாக பயன்படுத்துவதன் அவசியத்தை அறிந்து கொள்ள, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் இத்திட்டத்துக்காக அரும்பாடுபட்ட தலைவர்களின் தியாகம், தொலை நோக்குப்பார்வை, பங்களிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் புகைப்படத்தொகுப்புகள் இவ்வளாகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு, பேசினார்.

தி.மு.க.,வினர் மரியாதை



முன்னாள் அமைச்சர் சாமிநாதன், எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ.,க்கள் நித்தியானந்தன், சுதாகர், ஜெயராமகிருஷ்ணன், ஜெயக்குமார், நகராட்சி தலைவர் சியாமளா, மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், பி.ஏ.பி., வளாகத்தில், திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காங்கிரஸ்: கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக்க பாடுபட்டோர் திருவுருவச்சிலைக்கும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை கவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட தலைவர் விஜயகுமார், பி.ஏ.பி., பாசன குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us