/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு 'பாஸ்' ஆன பெண்ணா... படிக்க அழைக்கிறது அரசு பாலிடெக்னிக்!
/
பத்தாம் வகுப்பு 'பாஸ்' ஆன பெண்ணா... படிக்க அழைக்கிறது அரசு பாலிடெக்னிக்!
பத்தாம் வகுப்பு 'பாஸ்' ஆன பெண்ணா... படிக்க அழைக்கிறது அரசு பாலிடெக்னிக்!
பத்தாம் வகுப்பு 'பாஸ்' ஆன பெண்ணா... படிக்க அழைக்கிறது அரசு பாலிடெக்னிக்!
ADDED : செப் 05, 2024 12:24 AM
கோவை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு, காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் டிப்ளமோ படிப்புகளுக்கு, 19 ஆயிரத்து, 530 இடங்கள் உள்ளன.
இதில் முதலாமாண்டு, பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணைய வழியில் கடந்த மே, 10 முதல் 31ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டதில், 9,000 பேர் வரை, சேர்க்கையை உறுதி செய்தனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 7,000 பேர் வரை சேர்ந்தனர்.
நடப்பாண்டு, 10 ஆயிரம் இடங்கள் நிரம்பாததால், மீதமுள்ள இடங்களை கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. எனவே, மாணவர்கள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.
கோவை காந்திபுரம் பகுதியில், செயல்பட்டு வரும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், மொத்தமுள்ள, 380 இடங்களில், 346 இடங்கள் நிரம்பியுள்ளன; 34 இடங்கள் நிரம்பவில்லை. இவ்விடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், ''காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவியர் விரைந்து கல்லுாரியை அணுகி சேரலாம். மேலும் விபரங்களுக்கு, 98422 74719, 98947 84127 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். உயர்கல்வி பயில விருப்பம் உள்ள மாணவியருக்கு, இடம் வழங்கப்படும்,'' என்றார்.