ADDED : ஜூன் 19, 2026 02:40 PM
வால்பாறை: வால்பாறை நகரில் உள்ள தபால் அலுவலகத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக ஆதார் சேவை மையம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு மற்றும் ஆள் பற்றாக்குறையினால் சில மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின் பேரில், மீண்டும் ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோட்ட ஆய்வாளர் வெங்கட் கூறுகையில், ‘‘தபால் அலுவலகத்தில், வாடிக்கையாளர்கள் வசதிக்காக மீண்டும் ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. ஆதாரில் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவையும் செய்து தரப்படும். பள்ளி மாணவ, மாணவர்கள் ஆசிரியர்கள் வாயிலாக தபால் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆதார் சேவை பெறலாம்,’’ என்றார்.
