/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி கார்த்திகை சிறப்பு வழிபாடு
/
ஆடி கார்த்திகை சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 30, 2024 01:57 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 24ம் ஆண்டு ஆடி கார்த்திகை அபிேஷக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* குரும்பபாளையம் அமணீஸ்வரர் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* சேரன் நகர் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவிலில் பாலமுருகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை
உடுமலை காந்திநகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று, பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.