ADDED : செப் 01, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆத்துப்பாலம் போத்தனூர் ரோடு, சுந்தராபுரம் வெள்ளலூர் ரோடு பாதாள சாக்கடை மூடி சாலையின் மேல் பரப்பை விட்டு, சற்று கீழே இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
காலையிலும் மாலையிலும் இந்த ரோட்டை ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தின் அருகே திடீர் பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. பாதாள சாக்கடை மூடியிடும் இடத்தை ஒரே மட்டத்தில் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
