/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறும் தனியார் பஸ்களால் விபத்து; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
விதிமீறும் தனியார் பஸ்களால் விபத்து; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
விதிமீறும் தனியார் பஸ்களால் விபத்து; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
விதிமீறும் தனியார் பஸ்களால் விபத்து; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2024 09:16 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, ரோட்டில் சென்ற பைக்கை 'ஓவர் டேக்' செய்ய முயற்சித்த பஸ்சால் விபத்து ஏற்பட்டது.
கிணத்துக்கடவை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 37, ஆட்டோ ஓட்டுநர். இவர், மனைவியுடன் பொள்ளாச்சி - கோவை ரோட்டில், கிணத்துக்கடவு அருகே ஏலூர் பிரிவு பகுதியில் பைக்கில் சென்றார்.
அப்போது, இவரின் பின்னால் வந்த தனியார் பஸ் ஓட்டுநர், ரோட்டில் சென்ற லாரியை 'ஓவர் டேக்' செய்ய முயற்சித்தார். இதில், ரோட்டின் ஓரத்தில் சென்ற பைக் மீது, மோதும் படி சென்றதால், பைக்கில் சென்ற ரமேஷ்குமார், அவரது மனைவி தடுமாறி கீழே விழுந்தனர். விபத்தில், சிறு காயங்களுடன் தப்பினர்.
இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி - கோவை ரோட்டில், பெரும்பாலும் தனியார் பஸ்களால் விபத்து அதிகரித்து வருகிறது. ரோட்டில் அதிவேகமாக செல்வது, அதிக சப்தத்துடன் பாட்டு போடுவது, பயணியர்களிடம் கோபமாக நடந்து கொள்வது, அலட்சியமாக வாகனத்தை இயக்குவது என பல விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபற்றி, பலமுறை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பெயரளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண ஆர்.டி.ஓ., அலுவலர்கள், பஸ் ஓட்டுநர்கள் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், குறைந்தது ஒரு மாத காலத்துக்காவது விபத்து ஏற்படுத்திய பஸ்சை இயக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினர்.