/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை தேவை
/
கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 07, 2024 09:05 PM
கிணத்துக்கடவு;லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாகன கண்காணிப்புக்கு, கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் கூடுதல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், வடசித்துார் மற்றும் சொக்கனுார் செல்லும் ரோட்டில் அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் கேரளாவுக்கு சென்று வரும் வாகனங்கள் மற்றும் சர்வீஸ் ரோட்டில் ஏற்படும் விபத்தை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் கூறுகையில், 'தேர்தலை முன்னிட்டு செக்போஸ்ட் பகுதியில் சென்று வரும் வாகனங்களை கண்காணிக்க, கூடுதல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக, தமிழக எல்லையான, வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் பகுதியிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்த கூடுதல் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

