/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை: கலெக்டர்
/
பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை: கலெக்டர்
ADDED : செப் 17, 2024 11:23 PM
கோவை : பதிவு செய்யாத மகளிர் விடுதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்தும் சட்டம், 2014, (விதிகள் 2015) ன்படி அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும், இணைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
கோவையில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நடத்தும் தங்கும் பெண்கள் விடுதி, பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 2014 மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்பட வேண்டும். போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், தங்குபவர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து தடையின்மை சான்று பெற்று, உரிய ஆவணங்களுடன் விடுதியை பதிவு செய்ய வேண்டும். தவறாமல் புதுப்பிக்க வேண்டும்.
கோவையில் இதுவரை பதிவு மேற்கொள்ளாமல், செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் இணையம் வாயிலாக பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். தவறும் விடுதிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

