/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிப்பெருக்கு, அமாவாசை 60 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
/
ஆடிப்பெருக்கு, அமாவாசை 60 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
ADDED : ஆக 02, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஆடிப்பெருக்கு நாளையும் (ஆக., 3), ஆடி அமாவாசை நாளை மறுதினமும் (ஆக., 4) வருகிறது. சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை தினங்களில் வருவதால், மக்கள் சொந்த ஊருக்குச் செல்வர். பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் இன்று (ஆக., 2) முதல், 4ம் தேதி வரை, மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பஸ்களுடன் கூடுதலாக, 60 பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.