/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று நாள் தொடர் விடுமுறை: வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்
/
மூன்று நாள் தொடர் விடுமுறை: வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்
மூன்று நாள் தொடர் விடுமுறை: வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்
மூன்று நாள் தொடர் விடுமுறை: வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்
ADDED : ஆக 24, 2024 01:21 AM
கோவை;மூன்று நாள் தொடர் விடுமுறை காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், கோவையில் இருந்து கூடுதலாக 40 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது..
இதையடுத்து, கோவையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூரில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவை அரசுப்போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், “வழக்கமாக காந்திபுரத்தில் இருந்து 200 பஸ்கள் புறப்பாடு இருக்கும். தொடர் விடுமுறையை முன்னிட்டு, 220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூரில் இருந்து 300 பஸ்கள் இயக்கம் இருக்கும்.
இது 335 புறப்பாடுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம், தேனி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையைப் பொருத்து, மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,” என்றார்.

