/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் கேமராக்கள்: கலெக்டர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் கேமராக்கள்: கலெக்டர்
ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் கேமராக்கள்: கலெக்டர்
ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் கேமராக்கள்: கலெக்டர்
ADDED : மே 10, 2024 01:57 AM

பொள்ளாச்சி;'ஓட்டு எண்ணும் மையத்தில், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது,' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், தொண்டாமுத்துார் உள்ளிட்ட, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம், 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கலெக்டர் கூறுகையில், ''ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித பிரச்னையும் இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட கேமராக்கள் மட்டுமின்றி தனி லைனில் கூடுதலாக கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லைனில் உள்ள கேமராக்கள் செயல்படாமல் போனாலும், மற்றொரு லைனில் உள்ள கேமராக்கள் தொடர்ந்து இயங்கும். கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.