தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் கூடுதல் கலெக்டர் உறுதி

குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் கூடுதல் கலெக்டர் உறுதி

குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் கூடுதல் கலெக்டர் உறுதி


ADDED : ஜூன் 25, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கீத் பல்வந்த்வாகே பார்வையிட்டார்.

இதில், வடபுதூரில் உள்ள நாற்றங்கால் பண்ணை, துணை சுகாதார நிலையம், கொண்டம்பட்டி மேய்ச்சல் புறம்போக்கு பகுதியில் ஒன்றிய நிர்வாகம் சார்பில் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் இதர பணிகளை பார்வையிட்டார்.

குடிநீர் பிரச்னை குறித்து கூடுதல் கலெக்டரிடம் கேட்ட போது, ‘‘கிணத்துக்கடவு மட்டுமின்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிணத்துக்கடவுக்கு தனி குடிநீர் திட்டம் வேண்டும் என, பொது மக்கள் கேட்டுள்ளனர்.

‘‘ஆனால், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன், அதன் அடிப்படையில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தனி குடிநீர் திட்டம் குறித்து தலைமை செயலகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சில மாதங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us