/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொது இடங்களை சீரழிக்கும் விளம்பரங்கள்!' நடவடிக்கைக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் மனு

ADDED : ஆக 23, 2024 01:45 AM
கோவை;ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை பிரிவினர் டி.ஜி.பி., ஷங்கர் ஜிவாலுக்கு மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவை நகரம் முழுவதும் சாலையோரங்களில் சுவரில் எழுதுதல், சுவரொட்டி, அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை, பதாகைகள், கொடி கம்பங்கள் அமைத்தல் போன்றவற்றால் அனைத்து பொது இடங்களையும் சீரழித்து வருகின்றனர்.
இதில், அரசு அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், கல்வி நிறுவனங்களின் மதில்களும் தப்புவதில்லை. இது பிடியாணையின்றி கைது செய்யத்தக்க குற்றம். உடனடி நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியின் கடமை.
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் அதிக எண்ணிக்கையிலான பொது இடங்களில் நகரின் அழகை சிதைக்கும் வகையில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். புகார் அளித்து ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.
மாநிலம் முழுவதும், குறிப்பாக கோவை நகரில், தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சிதைவு தடுப்பு சட்டத்தை அமல்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.