/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி
/
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி
ADDED : ஜூலை 19, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை பல்கலை மானியக்குழு ( யு.ஜி.சி.,) வழங்கியுள்ளது.
கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி. இக்கல்லுாரி, சென்னை அண்ணா பல்கலையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை, 2024-25ம் கல்வியாண்டு முதல் 2028-29 கல்வியாண்டு வரை பல்கலை மானியக்குழு வழங்கியுள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து பெற உறுதுணையாக இருந்த அனைவரையும், கல்லுாரி தலைவர் முருகேசன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.