விளம்பர விருப்பம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
விளம்பர விருப்பம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 03, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் நடந்தது.
எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிமுறைககளின் அவசியம் குறித்தும் மாணவர்கள் வீதி நாடகம் வாயிலாக எடுத்துரைத்தனர். பொதுமக்களுக்கு காகிதப்பைகள் மற்றும் துணிப்பைகளை வழங்கி, அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
பள்ளி முதல்வர் டயானா மற்றும் எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் பொது தொடர்புத்துறை பொது மேலாளர் பிரகதீஸ்வரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
