தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 24, 2026 10:26 PM

ADDED : ஜூலை 24, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2026 10:26 PM ADDED : ஜூலை 24, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கற்பகம் நிகர்நிலை பல்கலையின் பொறியியல் துறை, முதலாமாண்டு பி.இ., பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக விஸ்டியான் கார்ப்பரேஷனின் மூத்த திட்ட மேலாளர் முகமது ஆசாத் அப்துல் கரீம் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், '' பொறியியல் பட்டதாரிகளுக்கு தொடர் கற்றல், தொழில்நுட்ப திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் முக்கியமானது. அதோடு, தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், '' என்றார்.

கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி முருகையா, பதிவாளர் பிரதீப், பொறியியல் துறை டீன் அமுதா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

புட்நோட்: மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த திட்ட மேலாளர் முகமது ஆசாத் அப்துல் கரீமை, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us