/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையில் இலை வாடல் கட்டுப்படுத்த அறிவுரை
/
வாழையில் இலை வாடல் கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 23, 2024 02:20 AM

கிணத்துக்கடவு:வாழையில் இலை வாடல் நோய்க்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக பேராசிரியர் ஆனந்தராஜா தீர்வு வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு பகுதியில், வாழை சாகுபடி அதிகளவு செய்யப்படுகிறது. இதில், பல்வேறு பாதிப்புகள் உள்ளது. பெரும்பாலும் வாழையில் இலை வாடல் ஏற்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டினால் வந்துள்ளது.
இரும்பு சத்து, போரான், மெக்னீசியம், போன்ற சத்துக்கள் மற்றும் கால்சியம் குறைவாக இருக்கும். இதை சரி செய்ய வாழை சக்தி நுண்ணுாட்டம் ஏக்கருக்கு, இரண்டு கிலோ மற்றும் 100 லிட்டர் தண்ணீருடன், ஆறு எலுமிச்சை பழம் கலந்து, 20 நாட்கள் இடைவெளியில், 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாழையில் இலை வாடலை கட்டுப்படுத்தலாம், என்றார்.

