/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்;எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
/
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்;எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்;எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்;எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
ADDED : மே 06, 2024 12:17 AM
கோவை:இன்று முதல் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வெப்பநிலை அபரிமிதமாக உயரும் அதனால் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இன்று முதல் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வெப்பம், 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உஷ்ணம் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பொது அறுவை சிகிச்சை நிபுணர் குமாரசாமி கூறியதாவது:
வெயிலின் தாக்கம் இன்று முதல் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மே மாதம் முடியும் வரை பகல் 12:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகளும, கர்ப்பிணிகளும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வெப்பத்தை தவிர்ப்பதற்கு, ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். ஐஸ் சேர்க்காமல் பழச்சாறு அருந்தலாம், இளநீர் மற்றவற்றை விட மிகவும் சிறந்தது மோர் அதை தொடர்ந்து பருகலாம்.
அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி மற்றும் டீ ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிடலாம். எலுமிச்சம் பழத்தை எப்போதும் வீட்டில் வைத்துக்கொள்ளவும்.
அடிக்கடி மாமிச உணவையோ, அதிக எண்ணெய் மற்றும் காரம் கலந்த உணவையோ உட்கொள்ள வேண்டாம். வெய்யிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். மண் பானை நீரை உட்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.