/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல் அலுவலர் பொறுப்பேற்பு
/
ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 06, 2024 05:54 AM
அன்னுார்: ஆறு மாதங்களுக்குப் பிறகு அன்னுார் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் பொறுப்பேற்றுள்ளார்.
அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த மோகனரங்கன் கடந்த பிப்ரவரி மாதம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஆறு மாதங்களாக செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது.
மோப்பிரிபாளையம் பேரூராட்சி, செயல் அலுவலர் பெலிக்ஸ், கூடுதல் பொறுப்பாக, அன்னுார் பேரூராட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி, செயல் அலுவலர் கார்த்திகேயன் பதவி உயர்வு பெற்று, அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.