/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரங்களை பதுக்கினால் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
/
உரங்களை பதுக்கினால் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
உரங்களை பதுக்கினால் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
உரங்களை பதுக்கினால் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
ADDED : செப் 02, 2024 01:29 AM
பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கி வைத்து, முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தென்னை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உரம் உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மானிய உரங்களை பிற மாநிலம் அல்லது மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து, விற்பனை செய்திட வேண்டும். உர மையத்தில் அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது.
தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது. விவசாயிகளுக்கு தரமான உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது, உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால், உர உரிமம் ரத்து செய்யப்படும் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடாசலம் தெரிவித்தார்.