/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு அனைத்து பெருமையும் அ.தி.மு.க.,வுக்கே'
/
'அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு அனைத்து பெருமையும் அ.தி.மு.க.,வுக்கே'
'அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு அனைத்து பெருமையும் அ.தி.மு.க.,வுக்கே'
'அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு அனைத்து பெருமையும் அ.தி.மு.க.,வுக்கே'
ADDED : ஆக 22, 2024 06:07 AM

அவிநாசி : ''அத்திக்கடவு - அவிநாசி திட்டச் செயல்பாடுக்கான முழுமையான பெருமை அனைத்தும், அ.தி.மு.க.,வை மட்டுமே சேரும்'' என்று அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டச் செயல்பாடு துவங்கப்பட்டதையொட்டியும், திட்டத்துக்கு அ.தி.மு.க., ஆட்சியில் 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி திட்டம் நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திட்டத்தால் பயன்பெறும் குளம், குட்டைகளை முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், விஜயகுமார் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பார்வையிட்டு, தண்ணீருக்கு மலர்துாவி வரவேற்றனர்.
பின், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த மூன்று ஆண்டில், மீதம் இருந்த, 10 சதவீத வேலைகளை கூட முடிக்காமல் காலம் கடத்தியது. தொடர்ந்து திட்டத்தை முடிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததும், வேண்டா வெறுப்பாக மீதமுள்ள பணிகளை முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், மொத்த திட்டத்தையும் தாங்களே கொண்டு வந்து நிறைவேற்றியது போல, 'நாங்கள் கொண்டு வந்த திட்டம்' என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
'அத்திக்கடவு- அவிநாசி திட்டம் - 2' என உருவாக்கி மத்திய அரசின் நிதியை பெற்று, தமிழக அரசு கொண்டு வரட்டும். அதை வைத்து அவர்கள் சொந்தம் கொண்டாடட்டும். அத்திக்கடவு திட்டம் முழுக்க முழுக்க அ.தி.மு.க., அரசால், அதுவும் பழனிசாமியால் கொண்டு வரப்பட்டது. அந்த பெருமை அ.தி.மு.க.,வை மட்டுமே சேரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.