/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய ஜூனியர் பேட்மின்டன் ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர் 'சாம்பியன்'

ADDED : ஆக 22, 2024 11:42 PM
கோவை:அகில இந்திய ஜூனியர் பேட்மின்டன் போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர் ஸ்வஸ்திக் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய பேட்மின்டன் சம்மேளனத்துடன், ஒடிசா மாநில பேட்மின்டன் சங்கம் இணைந்து நடத்திய, 'யோனெக்ஸ்-சன்ரைஸ்' அகில இந்திய ஜூனியர் ரேங்கிங் பேட்மின்டன் போட்டி-2024' ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.
இதில், 19 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பி.காம்., பன்னாட்டு வணிகத்துறை இரண்டாமாண்டு மாணவர் ஸ்வஸ்திக், முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், கோவையில் நடந்த தமிழ்நாடு மாநில பேட்மின்டன் போட்டி ஆண்கள் பிரிவில் முதலிடமும், சிவகாசியில் நடந்த மாநில 'ரேங்கிங்' போட்டியில் முதலிடமும் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவர் ஸ்வஸ்திக்கை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.