/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் இணைந்த முன்னாள் மாணவர்கள்
/
கல்லுாரியில் இணைந்த முன்னாள் மாணவர்கள்
ADDED : ஆக 13, 2024 10:40 PM

கோவை:கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
படித்த வகுப்பறையில் அமர்ந்து, தங்கள் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்த அவர்கள், ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினர்கள் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனாவின் இசை நிகழ்ச்சி, மனவளக்கலை நிபுணர் அருணின் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லுாரி இந்நாள் மாணவர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்வுகளும் நடந்தன.
கல்லுாரியின் முதல்வர் சுதா மோகன்ராம், முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவதுடன், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் கல்லுாரிக்கும் இடையே, பாலமாக செயல்படுவதாக பாராட்டினார்.
கல்லுாரி இயக்குனர் ராஜாராம், முன்னாள் மாணவர்களின் குழு தலைவர் பாலாஜி, செயலாளர் சரவணன், பொருளாளர் ரித்தேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.