/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
பி.எஸ்.ஜி., கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு
பி.எஸ்.ஜி., கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு
பி.எஸ்.ஜி., கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஆக 20, 2024 12:17 AM

கோவை:பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், 1964 முதல் 1969 வரை படித்து, பி.இ., பட்டம் பெற்ற, முன்னாள் மாணவர்களின் வைரவிழா சந்திப்பு நடந்தது.
கடந்த, 1964ம் ஆண்டு கல்லுாரியில் சேர்ந்து மலர்ந்த நட்பு, கடந்த 60 ஆண்டுகளாக ஆலமரமாக வளர்ந்து இருப்பதைக் கொண்டாடும் வகையில், வைரவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தங்கள் பழைய கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்களான கே.ஜி., குழும தலைவர் கண்ணப்பன், பிரிக்கால் விஜய் மோகன், யு.எஸ்.ஏ.,பெஸ்ட் குழுமம் சுதந்திரன், யுனைடெட் பவுண்டரி குழுமம் கோவிந்தராஜன், இந்திரா இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பொன்னுசாமி மற்றும் பலர் சுய தொழில் தொடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி, சமுதாயத்தொண்டு ஆற்றிக்கொண்டிருப்பதற்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில், புலவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கே.ஜி., குழும செயலாளர் கந்தசாமி, பி.எஸ்.ஜி., டெக் முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி ஆகியோர், விழாவில் கலந்துகொண்டனர்.

