/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான நிலையத்தில் பரிசோதனை டாக்டர்களுடன் ஆம்புலன்சும் தயார்
/
விமான நிலையத்தில் பரிசோதனை டாக்டர்களுடன் ஆம்புலன்சும் தயார்
விமான நிலையத்தில் பரிசோதனை டாக்டர்களுடன் ஆம்புலன்சும் தயார்
விமான நிலையத்தில் பரிசோதனை டாக்டர்களுடன் ஆம்புலன்சும் தயார்
ADDED : ஆக 21, 2024 12:00 AM

கோவை;குரங்கம்மை நோய் தடுப்பாக, கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளில் குரங்கம்மை எனப்படும், 'எம்பாக்ஸ்' நோய் பரவி வருகிறது. இதையடுத்து, கோவைக்கு விமானத்தில் வரும் பயணிகளுக்கு, குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளனவா என, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த நாட்டிலிருந்து மட்டுமின்றி, பிற வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளும், கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முதல் அறிகுறியாக காய்ச்சல், கொப்புளங்கள் உள்ளனவா என்பது ஆய்வு செய்யப்படுகின்றன.
கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து, பரிசோதனைகளை மேற் கொள்கின்றனர்.
இரண்டு டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறிகளோ, அம்மையோ கண்டறியப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது, என்றார். ----------------

