ADDED : ஆக 06, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: ஆனந்த அனுபவம் பயிற்சி வகுப்பு, அன்னுாரில் நடக்கிறது.
அன்னுார் குமாரபாளையம் சாலையில் உள்ள வாழும் கலை மையத்தில், வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை வகுப்பு நடக்கிறது. அறிமுக வகுப்பு 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். சுதர்சன கிரியா, மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் கற்பிக்கப்படும். பயிற்சியை தொடர்ந்து செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தெளிவான சிந்தனை உருவாகும். உறவுகளை ஆரோக்கியமாக பேண முடியும் என, நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விபரங்களுக்கு 97877 35359.
