/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏஞ்சல்' வரி விலக்கால் முதலீடு அதிகரிக்கும்! ' ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவங்குவது எளிதாகும்
/
'ஏஞ்சல்' வரி விலக்கால் முதலீடு அதிகரிக்கும்! ' ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவங்குவது எளிதாகும்
'ஏஞ்சல்' வரி விலக்கால் முதலீடு அதிகரிக்கும்! ' ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவங்குவது எளிதாகும்
'ஏஞ்சல்' வரி விலக்கால் முதலீடு அதிகரிக்கும்! ' ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவங்குவது எளிதாகும்
ADDED : ஜூலை 30, 2024 06:38 AM

திருப்பூர்: 'ஏஞ்சல்' வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கான வெளிநாட்டு முதலீடு அதிகரிக்குமென, தொழில்முனைவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலக அளவில், புதிய சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு, மாறுபட்ட கோணத்தில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற திட்டத்தில், புதிய தொழில் துவங்குவது ஊக்குவிக்கப்படுகிறது. 'ஸ்டார்ட் அப்' துவங்குவதில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
கடந்த, 2016 முதல், 'ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. புதிய தொழில்முனைவோருக்கு, 'அடல் இன்குபேஷன்' மையம் வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
இருப்பினும், 'சீடு பண்ட்' எனப்படும், ஆரம்ப கட்ட நிதி ஆதாரத்தை உருவாக்குவது, மிகவும் சிரமமாக இருந்தது.
அதற்காகவே 'ஏஞ்சல்' என்ற பெயரில், பங்கு முதலீடு திரட்டப்பட்டது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீடுகளும் வரவேற்கப்பட்டது. இருப்பினும், கறுப்பு பணம் முதலீடு செய்வதை கட்டுப்படுத்த, 'ஏஞ்சல்' வரி விதிப்பு செய்யப்பட்டது. இதனால், 'ஸ்டார்ட் அப்' முதலீடு அடியோடு குறைந்தது.
இது குறித்தான தொழில்துறையினர் கோரிக்கையை ஏற்று, மத்திய பட்ஜெட்டில், 'ஏஞ்சல்' வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், ஆரம்ப கட்ட நிதி ஆதாரம் திரட்டுவது எளிதாகுமென,தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, 'ஸ்டார்ட் அப்' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:
இந்தியாவில், 2016 முதல், 2 லட்சம் 'ஸ்டார்ட் அப்'கள் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும், 102 'யுனிகான்ஸ்' மட்டுமேபதிவு செய்துள்ளன. ஏஞ்சல் முதலீட்டாளர் வாயிலாக, 'ஸ்டார்ட் அப்' தொழில் துவங்க, ஆரம்பகட்ட நிதி ஆதாரம் பெறுவது எளிதாக இருந்தது.
முதலீட்டாளர்களுக்கு பங்கு அடிப்படையில், முதலீட்டில், 16 சதவீதம் அளவுக்கு, ஆண்டு வருவாய் கிடைக்கிறது. சந்தை மதிப்பின் அடிப்படையில், 31 சதவீதம் 'ஏஞ்சல்' வரிவிதித்ததால், முதலீடு தடைபட்டது.பட்ஜெட்டில், 'ஏஞ்சல்' வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரம்ப கட்ட நிதி திரட்டுவது இனி எளிதாகும்; புதிய 'ஸ்டார்ட் அப்' தொழில் துவங்குவது அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.