/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறவழிச் சாலைக்கு ஒரு அடி விவசாய நிலம் கூட தர முடியாது கூட்டமைப்பு கூட்டத்தில் அறிவிப்பு

ADDED : மார் 08, 2025 11:28 PM
அன்னூர்: 'கோவை சத்தி புறவழிச்சாலைக்கு, விவசாய நிலத்தை தர மாட்டோம்,' என எதிர்ப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து, கோவை சத்தி புறவழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், பசூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கொங்கு மண்டல விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் முருகசாமி தலைமை வகித்து பேசுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் பெரும்பாலான குளம், குட்டைகளில் நீர் உள்ளது . நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பலரும் ஆர்வமாக விவசாயம் செய்ய துவங்கியுள்ளனர். தற்போது பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, புறவழிச்சாலை அமைப்பது தேவையற்றது, என்றார்.
முன்னிலை வகித்த, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேலுச்சாமி பேசுகையில்,ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். முடியாத இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம். ஒரு அடி விவசாய நிலம் கூட தர மாட்டோம், என்றார்.
வரும் 11-ம் தேதி அன்னூர், கோவில்பாளையம் வட்டாரங்களை சேர்ந்த, புறவழிச்சாலையால் பாதிக்கப்படும் பொதுமக்கள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து கோவை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை (நிலம் எடுப்பு) சந்தித்து 15 கேள்விகள் அடங்கிய ஆட்சேபனை கடிதம் வழங்க, முடிவு செய்யப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விஸ்வநாதன், முன்னோடி விவசாயி செல்வராஜ், உள்பட பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.