/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப் பொருள் ஒழிப்பு மராத்தான்
/
போதைப் பொருள் ஒழிப்பு மராத்தான்
ADDED : செப் 01, 2024 12:33 AM

கோவை;போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகத்தை ஏற்படுத்த, ஐந்து கி.மீ., மராத்தான் போட்டி நேற்று நடந்தது. 80 கல்லூரிகளில் இருந்து திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில் நடந்த இப்போட்டி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக்கல்லுாரியில் துவங்கியது. கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்க தலைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமை வகித்தார்.
கல்லுாரி மாணவர்களிடையே போதை பொருட்கள், அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்க செயலாளர் சேதுபதி, மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.