/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி! விவசாயிகள் நலனுக்கு மேம்படுத்தப்பட்டு அறிமுகம்
/
தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி! விவசாயிகள் நலனுக்கு மேம்படுத்தப்பட்டு அறிமுகம்
தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி! விவசாயிகள் நலனுக்கு மேம்படுத்தப்பட்டு அறிமுகம்
தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி! விவசாயிகள் நலனுக்கு மேம்படுத்தப்பட்டு அறிமுகம்
ADDED : மே 01, 2024 11:10 PM
பொள்ளாச்சி : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட, 'தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, தானியங்கி வேளாண் சார்ந்த ஆலோசனை செயலி உருவாக்கப்பட்டது. 2022 வரை பயன்பாட்டில் இருந்த நிலையில், செயலியை மேம்படுத்தும் பணி துவங்கப்பட்டு, தற்போது, 'தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலி' அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக, கூகுள் பிளே ஸ்டோரில், tnau aas என 'டைப்' செய்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, 'தானியங்கி வேளாண் வானிலை சேவை' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்டு மொபைலில் நிறுவலாம்.
செயலியை செயல்படுத்தியவுடன், மேல்புற வலது மூலையில் காணப்படும் மூன்று கோடுகளை தொட்டால் கிடைக்கும் தொகுப்பில், 'பதிவு செய்ய' என்ற வார்த்தையை 'கிளிக்' செய்து, தங்கள் சுய விபரம் மற்றும் கடவுச் சொல்லை பதிவிட வேண்டும்.
முக்கியமாக, தங்களின் பெயர், தந்தை பெயர், மாநிலம், மாவட்டம், வட்டாரம், மொபைல்போன் எண் மற்றும் 8 இலக்க கடவுச்சொல் ஆகிய, 7 விபரங்களை மட்டும் பதிவிட்டால் போதும். ஏனைய விபரங்கள் தேவையில்லை.
பயிர் விதைப்பு தேதி
பதிவு செய்த மொபைல்போன் எண்ணையும், கடவுச் சொல்லையும் உபயோகப்படுத்தி செயலிக்குள் நுழைய வேண்டும். அங்கு, தாங்கள் பயிரிட்டுள்ள அல்லது ஓரிரு வாரங்களுக்குள் பயிரிடப் போகும் பயிரையும், விதைப்பு தேதியையும் பதிவிட வேண்டும்.
அதன் வாயிலாக, தங்கள் பயிருக்கு தேவையான வானிலை சார்ந்த ஆலோசனைகள், வாரத்துக்கு ஒன்று அல்லது இருமுறை இந்த செயலியில் கிடைக்கும். ஒரு விவசாயி எத்தனை பயிர் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். பதிவு செய்துள்ள பயிர்களை தொட்டவுடன், அதற்குரிய ஆலோசனைகளை காணலாம்.
விவசாயிகளுக்கு தடையில்லாமல், தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரங்களும், தேவையான விபரங்களும், உடனடியாக கிடைப்பதற்காக உருவாக்கியுள்ள இந்த செயலியை பயன்படுத்தி, வானிலை இடர்பாடுகளை தவிர்க்கலாம்.
தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரங்களுக்கு, மேல் இடதுபுறம் உள்ள மூன்று பட்டைகளை தொட வேண்டும். இதனால் தெரியும் தொகுப்பில், 'வானிலை' என்பதை அழுத்தி, தங்களின் மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுத்தால், கடந்த வார வானிலையும் மற்றும் எதிர்வரும் வானிலையும், அட்டவணையில் தெரியும்.

