/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை அள்ளும் வேலை தீவிரம் அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
/
குப்பை அள்ளும் வேலை தீவிரம் அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
குப்பை அள்ளும் வேலை தீவிரம் அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
குப்பை அள்ளும் வேலை தீவிரம் அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
ADDED : மே 22, 2024 01:32 AM
கோவை;குப்பை மேலாண்மையை கண்காணித்து, தினமும் அறிக்கை சமர்ப்பிக்கும் விதமாக, மண்டலம் தோறும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை, 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் மேற்கொண்டு வருகின்றனர்.
வார்டுகளில் குப்பை தேக்கம், பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு தீர்வு காண, 'ரூட் சார்ட்' தயாரித்து துாய்மை பணிகள் மேற்கொள்வது, குப்பையை தரம் பிரித்து வாங்குவது போன்ற நடவடிக்கைகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால், குப்பை தேக்கம் முன்பைவிட ஓரளவு குறைந்துள்ளது. பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வார்டுகளில், குப்பை அதிகம் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, பொறுப்பு அலுவலர்களை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
காலை 7:30 மணி முதல்
ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்டலங்களில், தினமும் காலை, 7:30 மணி முதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மண்டல உதவி கமிஷனர்களும், தங்களது மண்டலத்துக்கான பொறுப்பு அலுவலர்களுடன் இணைந்து, கள ஆய்வு செய்து சரி செய்யவும், மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

