/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 01, 2024 11:36 PM

கோவை : அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் திறனறிவுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு விழா நேற்று நடந்தது.
பன்னீர்மடையில் உள்ள அக்சயா அகாடமி, சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான, திறனறிவு தேர்வு கடந்த மாதம், 21ம் தேதி நடந்தது. இதில், ஆறு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் வகையில், நேற்று பாராட்டு விழா நடந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5,000 பரிசு தொகையை, பள்ளி செயலாளர் பட்டாபிராமன் வழங்கினார்.
அதிக மதிப்பெண் பெற்ற, 25 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பள்ளியில் பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, பள்ளி செயலாளர் உறுதி அளித்துள்ளார். பள்ளி நிறுவனர் புருசோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

