/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
/
பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 06, 2024 12:14 AM
கோவை;கோவை மாவட்டத்தில் பணி நிறைவுபெற்ற 9 முதுகலை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா திவ்யோதயா ஹாலில் நடந்தது.
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் கணேச மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் வரவேற்றார்.
ஜோய் ஆலுகாஸ் நிறுவன மேலாளர்கள் சுனிதன், ஜோன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் தமிழ்மணியன் சிறப்புரையாற்றினார். 25 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவுபெற்ற 9 முதுகலை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கனகராஜ், சங்க உறுப்பினர்கள் சுப்ரமணியம், ஸ்ரீதர், குணசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.