/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
/
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
ADDED : செப் 12, 2024 11:43 PM

மேட்டுப்பாளையம் : தமிழ் ஆசிரியர் அருள் சிவாவிற்கு, நல்லாசிரியர் விருது வழங்கியதை அடுத்து, அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் அருள்சிவா. இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். வெள்ளியங்காடு ஊராட்சி தலைவி ஜெயமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் வரவேற்றார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அருள்சிவா ஏற்புரை வழங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.