ADDED : ஜூன் 06, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம், ஒத்தக்கால்மண்டபம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட, ஆர்.சி.நகர், பிரீமியர் நகர்(பொள்ளாச்சி ரோடு மற்றும் பூங்கோதை நகர் உள்ளிட்ட பகுதிகள்), மாம்பள்ளி(தொப்பம்பாளைம், கிருபா கார்டன், முத்து கார்டன்), சீரபாளையம், ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஏப்ரல் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே ஜூன் மாதத்துக்கும் செலுத்தலாம் என, குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.
