/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் 'ஸ்டாக்' இருக்கிறதா? மூட்டைகளை கணக்கெடுத்த கலெக்டர்
/
ரேஷன் கடைகளில் 'ஸ்டாக்' இருக்கிறதா? மூட்டைகளை கணக்கெடுத்த கலெக்டர்
ரேஷன் கடைகளில் 'ஸ்டாக்' இருக்கிறதா? மூட்டைகளை கணக்கெடுத்த கலெக்டர்
ரேஷன் கடைகளில் 'ஸ்டாக்' இருக்கிறதா? மூட்டைகளை கணக்கெடுத்த கலெக்டர்
ADDED : ஜூலை 03, 2024 01:20 AM
கோவை, ஜூலை 3-
செட்டிபாளையம் பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தில், போத்தனுார் ரோட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிக்கும் பணி, ஓராட்டுக்குப்பையில் தொட்டி கட்டும் பணி, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
மரகதம் நகர், ஓராட்டுக்குப்பையில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்ற கலெக்டர், அரிசி, பருப்பு மூட்டைகள், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு சரியாக இருக்கிறதா என, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை இயக்கி சரிபார்த்தார். மொத்தம் எத்தனை கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன; மீதமுள்ள ஸ்டாக் சரியாக இருக்கிறதா என, பதிவேட்டை சரிபார்த்தார்.
மரகதம் நகர் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு விபரங்களை கேட்டறிந்தார். செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற கலெக்டர், நாளொன்றுக்கு எத்தனை நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்; மருந்து இருப்பு விபரங்களை கேட்டறிந்தார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், செட்டிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.