/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரியாபுரம் தடுப்பணை பணி தரமாக மேற்கொள்ளணும்!
/
அரியாபுரம் தடுப்பணை பணி தரமாக மேற்கொள்ளணும்!
ADDED : மே 09, 2024 04:09 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, அரியாபுரம் தடுப்பணை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை, வடக்கலுார் ஆகிய ஐந்து அணைக்கட்டுகள் வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. மொத்தம், 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டு அணைக்கட்டுகள் சீரமைப்பு பணிகள், 11 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. அதில், அரியாபுரம் அணைக்கட்டு பணிகள் தரமாக மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், அணைக்கட்டு பகுதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு நடத்தி, விவசாயிகள் கூறுவது போன்று, தரமான முறையில் தான் கட்டப்படுகிறது. பணிகள் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.