/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்பார்வையாளர் மீது தாக்குதல்; மா.கம்யூ., கவுன்சிலர் மீது வழக்கு
/
மேற்பார்வையாளர் மீது தாக்குதல்; மா.கம்யூ., கவுன்சிலர் மீது வழக்கு
மேற்பார்வையாளர் மீது தாக்குதல்; மா.கம்யூ., கவுன்சிலர் மீது வழக்கு
மேற்பார்வையாளர் மீது தாக்குதல்; மா.கம்யூ., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூன் 27, 2024 05:59 AM

கோவை : துாய்மை பணியாளர் மேற்பார்வையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக மா.கம்யூ., கவுன்சிலர் மீது, வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி, 24வது வார்டில் துாய்மைப்பணியாளர் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் சிவக்குமார்,54. இவர் பீளமேடு, பி.ஆர். புரத்தில் உள்ள வார்டு அலுவலகம் முன்பு, நேற்று முன்தினம் காலை, 6:20 மணிக்கு பணியாளர்கள் வருகைப்பதிவேடு சரிபார்த்து வந்துள்ளார்.
அப்போது, இருவருடன் வந்த பி.ஆர்.புரத்தை சேர்ந்த மணி என்பவர், 'சாக்கடை சுத்தம் செய்யவில்லை' என கூறியுள்ளார். முந்தைய நாளே சுத்தம் செய்துவிட்டதாக கூறிய சிவக்குமாரிடம், வாக்குவாதம் செய்துள்ளனர்.
அங்கு வந்த வார்டு கவுன்சிலர் பூபதி(மா.கம்யூ.,) முன்னிலையில், சிவக்குமாரின் கழுத்தை பிடித்து தள்ளி தாக்கி, தகாத வார்த்தைகளால் மணி பேசியுள்ளார்.
வார்டு கவுன்சிலர் பூபதியிடம் முறையிட்டதற்கு, 'பொது மக்கள் அப்படித்தான் செய்வார்கள்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, கவுன்சிலர் பூபதி மற்றும் மணி ஆகிய இருவர் மீதும், நடவடிக்கை எடுக்குமாறு பீளமேடு போலீசில், சிவக்குமார் புகார் அளித்தார்.
பொது இடத்தில் ஆபாச வார்த்தைகள் பேசுதல், காயப்படுத்தும் செயல் ஆகிய பிரிவுகளில், கவுன்சிலர் பூபதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.