/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் விமானப்படை தளத்தில்: போர் விமான கருவி கண்காட்சி
/
சூலுார் விமானப்படை தளத்தில்: போர் விமான கருவி கண்காட்சி
சூலுார் விமானப்படை தளத்தில்: போர் விமான கருவி கண்காட்சி
சூலுார் விமானப்படை தளத்தில்: போர் விமான கருவி கண்காட்சி
ADDED : ஆக 16, 2024 03:23 AM

சூலுார் : கோவை மாவட்டம் சூலுார் விமானப்படைத் தளத்தில் 'தரங் சக்தி - 2024' எனும் பன்னாட்டு விமானப்படை வீரர்களின் பயிற்சி கடந்த, 6ம் தேதி துவங்கியது.
இதில், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினர் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த, 13ம் தேதி ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகள் கண்காட்சியை தமிழக கவர்னர் ரவி துவக்கிவைத்தார்.
மொத்தம், 62 அரங்குகளில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தை ஒட்டி, இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல்லாயிரக்கணக்கானோர் கண்காட்சியை கண்டு களித்தனர். பல்வேறு வகையான கருவிகளை கண்ட மக்கள், அதன் பயன்பாடுகளை கேட்டறிந்தனர்.

