/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
/
கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
ADDED : ஏப் 22, 2024 01:02 AM
கோவை;பிரியாணி கடைக்காரரை தாக்கிய, பள்ளி மாணவர் உட்பட சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை இடிகரை ரோடு வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் முகமது இப்ராம்ஷா, 47; அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு, 3 பேர் வந்து பிரியாணி பார்சல் கேட்டனர். முகமது இப்ராம்ஷா சிறிது நேரம் காத்திருக்க சொன்னார்.
ஆனால் அவர்கள், உடனே வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர். மூவரும், பிரியாணி கடைக்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தள்ளிவிட்டனர்.
அதில் அவர் அங்கிருந்த கண்ணாடி பொருட்கள் மீது விழுந்தார். கண்ணாடிகள் உடைந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முகமது இப்ராம்ஷா துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில் முகமது இப்ராம்ஷாவை தாக்கியது, மணியகாரம் பாளையத்தை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவர், 17 வயதான தொழிலாளி மற்றும் புதுகோட்டையை சேர்ந்த தேவா, 48, என்பது தெரிந்தது.
போலீசார், 17 வயது சிறுவர்கள், 2 பேரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தப்பி ஓடிய தேவாவை தேடி வருகின்றனர்.

