/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரல்வளையை அறுத்து போன் பறிக்க முயற்சி
/
குரல்வளையை அறுத்து போன் பறிக்க முயற்சி
ADDED : மே 01, 2024 01:56 AM
கோவை:கோவை புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள ரயில் பாதையில் வாலிபர் ஒருவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர் பணம், மொபைல்போனை கேட்டனர். அவர் தர மறுத்ததால் இருவரும் அவரை தாக்கி பிளேடால் கழுத்தை அறுத்தனர்.
வாலிபர் இருவரிடம் இருந்தும் தப்பி ரோட்டுக்கு ஓடி வந்தார். அந்த வழியாக சென்றவர்களிடம் உதவி கேட்டார். அருகிலிருந்தவர்கள் வாலிபரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில் விரைந்து மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதால், உயிரை காப்பாற்ற முடிந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குஜராத்தை சேர்ந்த அனுாப் 23, எனத் தெரிந்தது.
வேலை தேடி கோவை வந்ததாகவும், தன்னை ஏழு பேர் தாக்கியதாகவும், இருவர் தன் பேக்கை பறித்துக் கொண்டு தப்பியதாகவும் பேப்பரில் இந்தியில் எழுதி காட்டினார்.
அவர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக விசாரிக்கின்றனர்.